ஆரணியில் நடமாடும் ரேஷன் கடைகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

ஆரணியில் நடமாடும் ரேஷன் கடைகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆரணியில் நடமாடும் ரேஷன் கடைகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
Published on

ஆரணி,

ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரே எம்.ஜி.ஆர். சிலை அருகில் நகரும் ரேஷன் கடைகள் தொடக்க விழா கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நளினிமனோகரன், குணசீலன், கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜ்குமார், கோ.ஹரிதாஸ், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) மந்தாகினி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் ராஜன், ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு மற்றும் கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் காமாட்சி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு நகரும் ரேஷன் கடை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,123 முழு நேர ரேஷன் கடைகளும், 510 பகுதி நேர ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 373 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட உள்ளது. 13 வாகனங்கள் மூலமாக மாவட்டம் முழுவதும் அனைத்து தாலுகா பகுதிகளிலும் 25 ஆயிரத்து 796 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நகரும் ரேஷன் கடை மூலமாக பொருட்கள் விநியோகம் செய்ய நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

இதில் மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார், மாநில கூட்டுறவு இணையத்தின் இயக்குனர் கலைவாணி, பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள், இயக்குனர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com