மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மாதிரி வாக்குச்சாவடி

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மாதிரி வாக்குச்சாவடி
Published on

திருவள்ளூர்,

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மேல்நல்லாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் வண்ண பலூன்கள், வாழை மரங்கள் கட்டி வைத்தும் வரவேற்பு தோரணங்கள் வைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் வாக்காளர்களை கவரும் விதமாக வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டு வாக்குச்சாவடியின் ஒவ்வொரு இடத்திலும் வண்ண பலூன்கள் பொருத்தப்பட்டு நவீன தரத்துடன் உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சதீஷ்குமார், ஊராட்சி செயலாளர் சுகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com