பொய் பேசுவது பிரதமர் மோடிக்கு வேதவாக்கியம் காங்கிரஸ் கடும் தாக்கு

பொய் பேசுவது பிரதமர் மோடிக்கு வேதவாக்கியம் என்று காங்கிரஸ் கடுமையாக தாக்கியது.
பொய் பேசுவது பிரதமர் மோடிக்கு வேதவாக்கியம் காங்கிரஸ் கடும் தாக்கு
Published on

பெங்களூரு,

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த்சர்மா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி பயன்படுத்தும் வார்த்தை சரியல்ல. மோடி பொய்களை மட்டுமே பேசுகிறார். பொய் பேசுவது என்பது அவருக்கு வேதவாக்கியமாக உள்ளது. ராகுல் காந்தியை அவமரியாதையாக பேசுகிறார். நாட்டில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாட்டில் 25 சதவீதம் பேருக்கு வீடு இல்லை. இது பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதைப்பற்றி மோடி பேசாமல் இருப்பது ஏன்?. வெறும் பொய்களை பேசுவதிலேயே காலத்தை விரயமாக்க வேண்டாம். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி கூறினார். அது என்ன ஆனது?. உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுபற்றி பெண்கள் குரல் எழுப்ப ஆரம்பித்து உள்ளனர். இது உங்கள் கவனத்திற்கு வரவில்லையா?.

நிரவ்மோடி, சோக்சி உள்பட பலர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டனர். இதனால் வங்கிகள் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. நாட்டில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளிப்பது ஏன்?. தேர்தல் வரும்போது மட்டுமே மோடிக்கு தேவேகவுடா நினைவுக்கு வருகிறார். தேவேகவுடா மீது ராகுல் காந்தி மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.

மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கும் குணம் ராகுல் காந்தியிடம் உள்ளது. கடந்த தேர்தலில் நீங்கள்(மோடி), தேவேகவுடாவை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னீர்கள். தேவேகவுடா மரியாதைக்குரிய தலைவர். அவரை பற்றி தவறாக பேசியதற்காக முதலில் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். கனிம சுரங்க முறைகேடு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ரெட்டி சகோதரர்கள் விஷயத்தில் மோடி இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளார் இவ்வாறு ஆனந்த்சர்மா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com