எழும்பூரில் நடந்து சென்றவரிடம் பணம்-செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது

எழும்பூரில் நடந்து சென்றவரிடம் பணம்-செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
எழும்பூரில் நடந்து சென்றவரிடம் பணம்-செல்போன் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
Published on

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 43). இவர் எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் திடீரென அவரது சட்டை பையில் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் புதுப்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த சாமுவேல் (26), இருதயராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com