நெமிலி அருகே வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு

நெமிலி அருகே வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி அருகே வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
Published on

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் திருமலைவாசன் (வயது 24). இவர் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் சேந்தமங்கலம் - சித்தூர் சாலையில் அரசு மதுபான கடை அருகே உள்ள பாலத்தை கடந்து சென்றார். அப்போது, குள்ளு என்கிற தியாகராஜன் மற்றும் முத்தரசு ஆகியோர் வழி மறித்து, அசிங்கமாக பேசியதாகவும், தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை பிடுங்க முயற்சித்த போது அதை தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன் தான் வைத்திருந்த பேனா கத்தியால் திருமலைவாசனின் கீழ் உதடு மற்றும் மூக்கின் மேல் குத்தியதாகவும், முத்தரசு கையில் வைத்திருந்த கம்பியால் பின் பக்க தலை மற்றும் வலது காது உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடித்துவிட்டு தன்னிடமிருந்த ரூ.7,750 மற்றும் செல்போனை , நெமிலி போலீஸ் நிலையத்தில் திருமலைவாசன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com