திருச்சி மத்திய மண்டலத்தில் பதற்றமான 723 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம்

திருச்சி மத்திய மண்டலத்தில் பதற்றமான 723 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்று தேர்தல் டி.ஜி.பி. பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மத்திய மண்டலத்தில் பதற்றமான 723 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம்
Published on

திருச்சி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ்சுக்லா திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதாலெட்சுமி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜியாவுல்ஹக்(திருச்சி), ராஜசேகர்(கரூர்), செல்வராஜ்(புதுக்கோட்டை), சீனிவாசன்(அரியலூர்), திஷாமிட்டல்(பெரம்பலூர்), மகேஷ்வரன்(தஞ்சை), துரை(திருவாரூர்), விஜயகுமார் (நாகப்பட்டினம்), திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் நிஷா, மயில் வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திருச்சி மாநகரம் மற்றும் மத்திய மண்டல எல்லைக்குள் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 நாடாளுமன்ற தொகுதிகளும், ராமநாதபுரம், சிவகங்கை, சிதம்பரம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளின் சில பகுதிகளும் உள்ளன. இது தவிர, தஞ்சை மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி களுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. மேற்கண்ட தொகுதி களில் 5,783 இடங்களில் 11 ஆயிரத்து 304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. இதில் 551 இடங்களில் 723 வாக்குச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய மண்டலம் மற்றும் மாநகரத்தில் 372 பறக்கும் படையினரும், 129 நிலை கண்காணிப்புக்குழுக் களும் அமைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட் டது.

மேலும், தேர்தல் விதிமுறை கள் தொடர்பாக பெறப்படும் அனைத்து புகார்களின் மீதும் உரிய விசாரணை நடத்தி எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைளையும் எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு உள்ளதாகவும், தேர்தலின் போது, சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாதவாறு தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com