திருத்தணி முருகன் கோவிலில் 45 காலி பணியிடங்களுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

திருத்தணி முருகன் கோவிலில் உள்ள 45 காலி பணியிடங்களுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில் 45 காலி பணியிடங்களுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்துறை, வெளித்துறை, உதவி அர்ச்சகர், நாதஸ்வரம் வாசிப்பவர், கடைநிலை ஊழியர் என 45 காலி பணியிடங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் இந்து அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதலுடன் அறிவித்தது.

இதையடுத்து திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் தினந்தோறும் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்

அதே இடத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் பெற்று வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள 45 காலி பணியிடங்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்று செல்கின்றனர்.

மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரிசையில் நின்று இந்த அலுவலகத்தில் அளித்து வருகின்றனர்.

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்ப மனுக்களை அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com