மோட்டார் வாகன பரிணாம வளர்ச்சி குறித்த கண்காட்சி மும்பையில் தொடங்கியது

அந்த நாள் ஞாபகத்தை நினைவு படுத்தும் வகையில் மும்பையில் மோட்டார் வாகன பரிணாம வளர்ச்சி குறித்த கண்காட்சி தொடங்கியது.
மோட்டார் வாகன பரிணாம வளர்ச்சி குறித்த கண்காட்சி மும்பையில் தொடங்கியது
Published on

மும்பை,

மும்பை பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் கார், மோட்டார் சைக்கிள்களின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் வகையிலான கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் முதல் தற்போது அறிமுகம் ஆன வாகனங்கள் வரை வைக்கப்பட்டு உள்ளன.

இதில், சைக்கிளை போன்று உள்ள பழமையான மோட்டார் சைக்கிள்கள், பெரிய அளவிலான டயர்களுடன் தயாரிக்கப்பட்ட 3 சக்கர கார்கள், 2 பேர் மட்டுமே செல்லும் வகையிலான கார்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்த கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். கடைசி நாளான நாளை கார், மோட்டார் சைக்கிள்களின் அணிவகுப்பு பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com