ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தனியார் நிறுவன மேலாளர் பலி

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் பலியானார்.
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: தனியார் நிறுவன மேலாளர் பலி
Published on

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா ஓலப்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வரதராஜம் பிள்ளை. இவரது மகன் பிரேம்குமார் (வயது 47). இவர் ஆத்தூரில் ராசிபுரம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் விவசாய வாகன விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை பிரேம்குமார் தனது மகனை பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விட்டு,விட்டு அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி புறவழிச்சாலையில் அவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையத்தை சேர்ந்த தங்கவேலு (32) என்பவர் வந்து கொண்டிருந்தார்.

இதனிடையே எதிரே அதிவேகமாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பிரேம்குமார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். அப்போது பிரேம்குமார் சென்ற மோட்டார் சைக்கிளும், தங்கவேல் வந்த மோட்டார் சைக்கிளும் நிலைதடுமாறி ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தங்கவேல் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளையும், அதனை ஓட்டிச்சென்ற நபரையும் தேடி வருகிறார்கள். விபத்தில் உயிரிழந்த பிரேம்குமாருக்கு, லாவண்யா என்ற மனைவியும், ஆதித்யன், அகிலன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com