பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

பெரம்பலூர்,

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தினர் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை தலைவர் கவியரசன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் கோபிநாத், செயலாளர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்நோக்கு மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பணியாளர்களை தமிழக அரசு நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினக்கூலி அடிப்படையிலான தொகுப்பூதியத்தை மாதந்தோறும் 5-ந்தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் கண்மணி வரவேற்றார். முடிவில் பொருளாளர் பாரதிராஜா நன்றி கூறினார்.

1948 மருந்தியல் சட்ட விதிப்படி துணை சுகாதார மையங்களில் தொற்றா நோய் தடுப்பு மருந்துகளை கையாள மருந்தாளுனரை நியமன செய்ய வேண்டும். தலைக்காயம் மற்றும் விபத்து, அவசர சிகிச்சை பிரிவு மருந்தகங்கள் 24 மணி நேர இயங்க கூடுதல் பணியிடங்களை உருவாக்கி மருந்தாளுனரை நியமனம் செய்ய வேண்டும் என்ற 2 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் நேற்று மாலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கூத்தையன் தலைமை தாங்கினார். ஆனந்தன், மணிமேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயலட்சுமி கோரிக்கைகளை குறித்து விளக்கவுரையாற்றினார். மாநில செயலாளர் மணிமேகலை சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 2 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சண்முகநாதன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com