மாடுகளுக்கு தீவனமான வெண்டைக்காய்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் விலை வீழ்ச்சி அடைந்ததால் வெண்டைக்காய்களை மாடுகளுக்கு தீவனமாக்கி வருகின்றனர்.
மாடுகளுக்கு தீவனமான வெண்டைக்காய்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், புதுக்கோட்டை, அய்யர்மடம், குரும்பபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்ததால் மார்க்கெட்டுக்கு அதன் வரத்து அதிகமானது.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது ரூ.1.50-க்கு விற்பனை ஆனது.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

அதேநேரத்தில் வரத்து அதிகரித்ததால் தேக்கமடைந்த வெண்டைக்காய்கள், மாடுகளுக்கு தீவனமாக மாறியுள்ளது.

விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com