அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டு குருவாயூரப்பன்நகர், எஸ்.ஆர்.வி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அடிப்படை வசதி செய்துதர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் சிகாமணி தலைமையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய செயலாளர் பானுமதி மற்றும் சங்க உறுப்பினர், ஊர் பொதுமக்கள் நேற்று காலை போயம்பாளையத்தில் உள்ள 2-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் குடிநீர், சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உதவி கமிஷனர் செல்வநாயகத்திடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட உதவி கமிஷனர் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பாதாள சாக்கடை கால்வாய் பணி நடைபெறுவதால் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை உள்ளிட்ட பணிகள் தாமதமாகும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com