நாகை மாவட்டத்தில் கஜா புயலுக்கு 7 பேர் பலி

நாகை மாவட்டத்தில் கஜா புயலுக்கு 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நாகை மாவட்டத்தில் கஜா புயலுக்கு 7 பேர் பலி
Published on

நாகப்பட்டினம்,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. மேலும் நாகை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 7 பேர் இறந்துள்ளனர். நாகை மாவட்டம் வாய்மேடு அடுத்த சிந்திக்காட்டை சேர்ந்த சுப்பையன் (வயது56), கோடியக்காடு மேலவீதியை சேர்ந்த வடுகநாதன் (65) ஆகியோர் சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

மேலும் திருக்குவளை அருகே உள்ள மேலவாளக்கரையை சேர்ந்த வீராச்சாமி மனைவி கிளியம்மாள் (75), தொழுதூரை சேர்ந்த பாலமுருகன் மகன் சந்திரமோகன் (20), சித்தாய்மூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (63), திருக்குவளை தாலுகா அருந்தவபுலத்தை சேர்ந்த மைக்கேல் மனைவி மேரிமைக்கேல் (வயது50) ஆகியோரும் கஜா புயலுக்கு இறந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குரும்பால் ரெயிலடி தெருவை சேர்ந்த செல்லப்பன் மகன் சிவசக்தி (6). இவன் தனது பெற்றோருடன் திருக்குவளை தாலுகா அருந்தவபுலத்தை அடுத்த நாகமங்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த போது கஜா புயலுக்கு பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com