நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன் என்றார்.
நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு
Published on

இட்டமொழி,

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள புதுக்குறிச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் பிரசாரத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து ரெட்டியார்பட்டி நாராயணன் ஆனையப்பபுரம், பருத்திப்பாடு, ரெங்கசமுத்திரம், சுருளை, மறவன்குளம், நெல்லையப்பபுரம், பெருமாள் நகர், ஆழ்வானேரி, பனையன்குளம், கோவைகுளம், கருப்புகட்டி, அ.சாத்தான்குளம், சகாயபுரம், தெய்வநாயகபேரி, மலையன்குளம், மாயனேரி, மருதகுளம், தோட்டாக்குடி, பாக்கியநாதபுரம், வடக்கு பத்தினிபாறை, தெற்கு பத்தினிபாறை, உலகம்மாள்புரம், மூன்றடைப்பு, மேலூர், இளையாமுத்தூர், வாகைகுளம், பூலம், ஆயனேரி, பாணான்குளம், முதலைகுளம், கரந்தானேரி, தாழை குளம், நெடுங்குளம், மறுகால்குறிச்சி, நாங்குநேரி பேரூராட்சி இளந்தோப்பு, நம்பிநகர், பெரும்பத்து, இந்திராகாலனி, மஞ்சங்குளம், வீராங்குளம், கிருஷ்ணன்புதூர், ஆழ்வார்குளம், தட்டான்குளம், மேலக்காரங்காடு, நடுக்காரங்காடு, பெருமாள் நகர், நாச்சியார்நகர்,

இறைப்புவாரி, தென்னிமலை, பட்டப்பிள்ளைபுதூர், துலாச்சேரி, சிங்கனேரி, புத்தனேரி, சேவகன்குளம், கல்வெட்டான்குழி, மேல நாச்சான்குளம், கீழ நாச்சான்குளம், ஜெகநாதபுரம், நொச்சிகுளம், அனுமார்புதுக்குளம், தென்னவனேரி, செண்பகராமநல்லூர், காக்கைகுளம், வடக்கு இளையார்குளம், தெற்கு இளையார்குளம், குசவன்குளம், பிள்ளைகுளம், தெற்கு ஆரம்பூண்டார்குளம், உன்னங்குளம், மேல அரியகுளம், ஆயர்குளம், அம்பலம், இடையன்குளம், வடக்கு ஆரம்பூண்டார்குளம் ஆகிய கிராமங்களில் நடந்து சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் வெற்றி பெற்றால் தொகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன். குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த புகார்களை என்னை நேரில் அணுகி அளிக்கலாம். நான் உங்கள் பகுதியை சேர்ந்தவன் என்பதால் 24 மணி நேரமும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முடியும். உங்களுடைய இன்ப, துன்பங்களில் எப்பொழுதும் பங்கெடுத்தவன். உங்கள் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் அமைச்சர் தங்கமணி நேற்று இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் இருந்த வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஊர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அமைச்சர் தங்கமணி பேசுகையில், வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஏற்கனவே பஞ்சாயத்து தலைவராக இருந்து பணி செய்தவர். மக்களின் குறைகளை அறிந்தவர். நீங்கள் அவரை வெற்றி பெறச் செய்தால் உங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவார் என்றார்.

இதே போல் நாங்குநேரியில் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா பிரசாரம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com