நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குளம் போல் காட்சியளிக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில்: குளம் போல் காட்சியளிக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குளம் போல் காட்சியளிக்கும் சிறுவர் விளையாட்டு பூங்கா
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள கற்பகம்பாள் நகரில் செல்வ விநாயகர் கோவில் அருகே பேரூராட்சி சார்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையில் பூங்கா முழுவதும் தண்ணீர் தேங்கி குளமாக காட்சியளிக்கிறது. மேலும் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி வருகிறது. புதர்மண்டி காணப்படுகிறது.

பூங்காவில் உள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலந்து காணப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு குளமாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com