நரிக்குறவர்களுக்கு பசுமை வீடுகள் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

ஆம்பூர் அருகே உள்ள சோலூர் கிராமத்தில் மத்திய, மாநில அரசு நிதியுதவி மற்றும் ரோட்டரி மாவட்டம், ஆம்பூர் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நரிக்குறவர்களுக்கு 37 பசுமை வீடுகள் கட்டப்பட்டன.
நரிக்குறவர்களுக்கு பசுமை வீடுகள் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
Published on

ஆம்பூர்,

வீடுகளை நரிக்குறவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட இயக்குனர் பெரியசாமி, ரோட்டரி மாவட்ட செயலாளர் ஜே.கே.என்.பழனி, அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட ஆளுனர் ஜவுரிலால்ஜெயின் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பசுமைவீடுகளை வழங்கி திறந்து வைத்தார்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவிக்குமார், விமலநாதன், வாத்திகலீல், ஷமீம்அஹமத், ரமேஷ்பாபு, அண்ணாதுரை, திலீப்குமார், குணசேகரன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் சி.கிருஷ்ணன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன், விஜயபாரத மக்கள் கட்சி தலைவர் ஜெய்சங்கர், ஆம்பூர் இந்து கல்விச்சங்க தலைவர் டாக்டர் காந்திராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆம்பூர் ரோட்டரி சங்க தலைவர் எல்.பாலாஜிசிங் நன்றி கூறினார்.

முன்னதாக ரோட்டரி சங்கம் சார்பில் ஆம்புலன்ஸ், பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட்டது. நரிக்குறவர்கள் வீடு கட்டும் திட்டத்திற்காக ஆம்பூர் ஸ்டார் பிரியாணி உரிமையாளர் முனீர்அஹமத் ரூ.2 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com