பெரம்பலூரில் பூச்சிக்கொல்லிக்கு எதிரான தேசிய கூட்டமைப்பினர் ஆய்வு

பெரம்பலூரில் பூச்சிக்கொல்லிக்கு எதிரான தேசிய கூட்டமைப்பினர் ஆய்வு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்
பெரம்பலூரில் பூச்சிக்கொல்லிக்கு எதிரான தேசிய கூட்டமைப்பினர் ஆய்வு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பால் சில விவசாயிகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்திய அளவில் செயல்பட்டு வரும், பூச்சிக்கொல்லிக்கு எதிரான தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ஐதராபாத்தை சேர்ந்த நரசிம்மரெட்டி தலைமையிலான குழுவினர் பெரம்பலூருக்கு வருகை தந்து பூச்சிக்கொல்லி பாதிப்பு குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். குன்னம் வட்டம் ஓலைப்பாடி கிராமத்தில் பூச்சிக்கொல்லி பாதிப்பால் மருத்துவமனை சென்று உயிர் பிழைத்த பருத்தி விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று, பாதிப்பு மற்றும் குறைகளை கேட்டறிந்தனர். அந்த குழுவினர் தாங்கல் சேகரித்த தகவல்கள் குறித்து மத்திய-மாநில அரசுக்கு தெரியப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்த போவதாக தெரிவித்தனர். இந்த ஆய்வு குறித்து அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மரெட்டி கூறுகையில், பூச்சிக்கொல்லி பாதிப்பால் இறந்த விவசாயிகள் மற்றும் உடல் நலக்குறைபாட்டுடன் இருக்கும் விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வீரியமிக்க பூச்சிக்கொல்லிகளுக்கு தடைவிதிக்க அரசு முன்வர வேண்டும். உரிய பாதுகாப்பு உபகரணம் இல்லாததே, பூச்சிக்கொல்லி தாக்குதலுக்கு விவசாயிகள் பாதிப்படைந்ததற்கு காரணம் ஆகும். பூச்சிக்கொல்லி மேலாண்மை வரைவு மசோதா குறித்து கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மசோதா குறித்து விவாதித்து, சட்டமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு உடனடியாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தெலுங்கானா கிசான் காங்கிரஸ் அமைப்பின் துணை தலைவர் அன்வேஷ் ரெட்டி மற்றும் பெரம்பலூர் மாவட்ட தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com