கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு - 3,834 மாணவ, மாணவிகள் எழுதினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வினை, 3,834 மாணவ, மாணவிகள் எழுதினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு - 3,834 மாணவ, மாணவிகள் எழுதினர்
Published on

கிருஷ்ணகிரி,

மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் காலங்களில் மாதந்தோறும் ரூ. ஆயிரத்து 250 கல்வி ஊக்கத்தொகையும், இளங்கலை, முதுகலை படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ. 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி -2, ஓசூர் -4, காவேரிப்பட்டணம் -2, சூளகிரி, வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், மத்தூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய இடங்களில் தலா 1 மையம் என மொத்தம் 15 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வினை எழுத 4 ஆயிரத்து 232 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வினை 3 ஆயிரத்து 834 மாணவ, மாணவிகள் எழுதினர். 398 மாணவ, மாணவிகள் தேர்வினை எழுத வரவில்லை. கிருஷ்ணகிரியில் நடந்த தேர்வு மையத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com