பறித்தால் காய்.. உலுக்கினால் பழம்..

தினமும் காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மாலதி தோட்டத்திற்கு செல்ல தயாராகிறார். தோட்டத்தில் பறிக்கும் காய்கறிகள், கீரைகள், பழங்களை எடுத்து வருவதற்கு தேவையான கூடைகள், பைகளை காரில் ஏற்றிக் கொண்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு தோட்டத்தை நோக்கி பயணிக்கிறார்.
பறித்தால் காய்.. உலுக்கினால் பழம்..
Published on

மாலதி வசிக்கும் சென்னை மேடவாக்கத்தில் இருந்து தோட்டம் அமைந்திருக்கும் அகரம்தென் கிராமம் எட்டு கி.மீ. தூரத்தில் இருக்கிறது. தேட்டத்தை அடையும்போதே இவரை உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. அங்கே இவரை எதிர்பார்த்து ஐ.டி. துறையில் பணிபுரியும் திருமண மான பெண்களும், இளம் பெண்களும் காத்திருக்கிறார் கள். திருமணமான பெண்கள் தங்கள் பிள்ளைகளான சிறுவர், சிறுமியர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கெல்லாம் மாலதி விவசாய களப் பயிற்சியளிக்கிறார். அங்கு அவர்கள் நிலத்தை சரிசெய்கிறார்கள். பாத்தி அமைக் கிறார்கள். விதைவிதைக்கிறார்கள். நீர்பாய்ச்சுகிறார்கள்.. மொத் தத்தில் அவர்கள் விவசாயிகளாகவே மாறி கீரை, காய்கறிகளை பயிரிடுகிறார்கள்.

உச்சி வெயிலில் நின்றபடி அவர்களுக்கு விவசாயத்தை கற்றுக்கொடுக்கும் மாலதி, பெரும்பாலானவர்களுக்கு விவசாயத்தின் மீது பற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் கழனியில் இறங்கி வேலைபார்த்தால் விவசாயத்தை பற்றி தெரிந்துகொள்ளலாமே தவிர விவசாயியாக உருவாக முடியாது. அதனால் நான் ஆர்வமுள்ளவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் ஆறு மாதங்கள் என் தோட்டத்திலே விவசாயத்தை கற்றுக்கொடுக்கிறேன். இதை நாட்டுக்கு செய்யும் சேவையாக நினைத்து செய்துகொண் டிருக்கிறேன்.

இன்று ஒவ்வொரு பெண்ணுக்கும் கூடுதலாக இரண்டு கடமைகள் இருக்கின்றன. உணவு விஷமாக மாறி, உடல்நிலையை கெடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் இருந்து தப்பிக்க முதலில் அவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட ஆரோக்கிய மான காய்கறிகள் தேவை. அதை அவர்கள் தங்கள் வீடுகளிலே வளர்த்து, உணவில் பயன்படுத்தி தங்கள் குடும்பத்தின் ஆரோக் கியத்தை காப்பாற்ற வேண்டும். அதில் தன்னிறைவு பெற்ற பின்பு, சமூக நலன் கருதி அவர்கள் தனியாக இதுபோல் தோட்டங் களை அமைத்து இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகளை விளைவித்து மக்களுக்கு வழங்கி, நாட்டின் ஆரோக்கியத்தை மேம் படுத்தவேண்டும். அந்த இரண்டு கடமைகளையும் செய்ய இன்று நிறைய பெண்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்கவே இந்த களத்துமேட்டு கற்றலை நடைமுறைப்படுத்தியிருக்கிறேன். இதில் இன்னொரு முக்கியமான விஷயம். இப்போது ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்கள் மிகுந்த மனஅழுத்தத்தோடு வாழ்கிறார்கள். அவர்கள் மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த இதுபோன்ற தோட்டங்களை அமைத்து விவசாயிகளாக மாற முன்வருகிறார்கள் என்கிறார், மாலதி.

ஒரு ஏக்கர் பரப்புகொண்ட இவரது தோட்டத்தில் கோழி, ஆடு, தேனீ போன்றவைகளும் சுற்றி வருகின்றன. அங்கே 38 வகையான கீரைகளை விளைவிக்கிறார். தென்னை, மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி, சோளம், வேர்க்கடலை, சுண்டைக்காய், மஞ்சள், காராமணி போன்றவைகளும் பலவிதமான காய்கறிகளும் விளைந்திருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றையும் எப்படி விளைவிப்பது என்று கற்றுக் கொடுத்தபடியே, அன்றன்றைய அறுவடையையும் கவனிக்கிறார்.

49 வயதான மாலதி என்ஜினீயரிங் கற்றவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியை சேர்ந்தவர். இவரது கணவர் துப்பறியும் துறை நிபுணர் அருள்மணிமாறன். மகள் டாக்டர் ஆர்த்தி, மகன் ரமணா சட்டம் படிக்கிறார்.

வேர்க்கடலையை அறுவடை செய்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த மாலதி, தனது விவசாய வாழ்க்கையை விவரிக் கிறார்.

எனது தந்தை கதிரேசன் மின்சார துறையில் என்ஜினீயராக வேலை பார்த்தார். அவர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பணிமாற்றம் பெற்று போகும்போதெல்லாம் அம்மா அலமேலுவும் நானும் கூடவே சென்று விடுவேம். எல்லா இடத்திலும் எங்களுக்கு அரசு வீடு கிடைக்கும். அங்கே தோட்டம் அமைக்க நிறைய இடமும் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அம்மா வீட்டுத் தோட்டம் வளர்ப்பதை பார்த்தே நான் வளர்ந்தேன். நாங்கள் வளர்க்கும் காய்கறிகளும், கீரைகளும்தான் எங்களுக்கு உணவாகின. ஈரோட்டில் பள்ளி யில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளியிலே எங்களுக்கு தோட்டம் போட இடம் தந்து, அதன் விளைச்சலுக்கு தகுந்தபடி எங்களுக்கு மதிப்பெண் தருவார்கள். அதில் நான் எப்போதுமே அதிக மதிப்பெண் வாங்கிவிடுவேன்.

என்ஜினீயரிங் படிக்க சென்னை வந்தேன். படித்து முடித்த பின்பு இங்கேயே திருமண மானது. வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் மரம் வளர்க்கும் சேவையில் இறங்கினேன். 2000-ம் ஆண்டில் இருந்து வேளச்சேரி பகுதி விஜயநகரம், ராம் நகர் போன்ற இடங்களில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்த்தேன். நான் வளர்த்த பல மரங்கள் பெரிதாக வளர்ந்து பலன் தருகிறது. மாடித் தேட்டம் அமைக்கவும் நிறைய பேருக்கு கற்றுக்கொடுத்தேன். மாடித் தோட்டத்திற்கான ஆலோசனை வழங்க இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். துப்பறியும் நிபுணர் பணியிலும் என்னை ஈடுபடுத்தி, பெண்களின் நலனுக்காக சில அதிரடியான வழக்குகளையும் கையாண்டு, துப்பு துலக்கி யுள்ளேன் என்கிறார்.

மாடித் தேட்டத்தில் இருந்து இவர், பெரிய தோட்டம் அமைத்து விவசாயம் செய்ய மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் புளியங்குடி அந்தோணிசாமி, கு.சித்தர் போன்றவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com