கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று
Published on

மும்பை,

தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்து இருப்பவர் நடிகை நவ்னீத் ராணா. தற்போது இவர் மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதி எம்.பி. ஆக உள்ளார். இவரது கணவர் ரவிராணா எம்.எல்.ஏ. ஆவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நவ்னீத் ராணாவின் மாமனாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து நடத்திய பரிசோதனையில் குடும்பத்தினர் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் நவ்னீத் ராணாவுக்கு அப்போது தொற்று கண்டறியப்படவில்லை.

ஆஸ்பத்திரியில் அனுமதி

சில நாட்கள் கழித்து எடுக்கப்பட்ட பரிசோதனையில், நவ்னீத் ராணாவையும் கொரோனா தாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 6-ந்தேதி முதல் அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நவ்னீத் ராணா நேற்று நாக்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நவ்னீத் ராணா, அவரது கணவர் ரவி ராணா, 2 குழந்தைகள் உள்பட அவரது குடும்பத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com