அருப்புக்கோட்டை அருகே, மரத்தில் கார் மோதியது - 9 பேர் படுகாயம்

அருப்புக்கோட்டை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே, மரத்தில் கார் மோதியது - 9 பேர் படுகாயம்
Published on

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வடமலாபுரத்தை சேர்ந்தவர் கற்பகவேல். இவர் தனது குடும்பத்தினருடன் ராமேசுவரத்திற்கு சென்று திதி கொடுப்பதற்காக வாடகை காரில் சென்றார்.

காரை சிவகாசியை சேர்ந்த கதிரேசன் என்பவர் ஓட்டினார். திதி கொடுத்துவிட்டு நேற்று மாலை ஊருக்கு சன்றுகொண்டு இருந்தார். அப்போது அருப்புக்கோட்டையை அடுத்த புளியம்பட்டி அருகே விருதுநகர் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த டிரைவர் கதிரேசன், சஞ்சய்குமார், ரவி, கார்த்திகாயினி, கிஷோர், ராஜகணபதி, சுதா, சுந்தரவள்ளி உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com