ஆத்தூர் அருகே காதல் மனைவியை கொன்ற வியாபாரி பரபரப்பு வாக்குமூலம்

ஆத்தூர் அருகே காதல் மனைவியை கொன்ற வியாபாரி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆத்தூர் அருகே காதல் மனைவியை கொன்ற வியாபாரி பரபரப்பு வாக்குமூலம்
Published on

ஆறுமுகநேரி,

ஆத்தூர் அருகே உள்ள தெற்கு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவரும் ஆழ்வார்திருநகரி மணல்குண்டு பகுதியைச் சேர்ந்த ரம்யா (21) என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். கொரோனா தொற்று காரணமாக தொழில் நழிந்து போனதால் அவர்கள் ஊருக்கு திரும்பினர். தெற்கு ஆத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 5 மாதங்களாக சரவணன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் ரம்யாவின் நடத்தையில் சரவணன் சந்தேகம் அடைந்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ரம்யாவை கழுத்தை நெரித்து சரவணன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

எனது மனைவி ரம்யாவை பற்றி அக்கம்பக்கத்தினர் தவறாக பேசி வந்தனர். அப்பகுதியில் உள்ள வேறு ஒருவரிடம் ரம்யா பேசி பழகி வந்தார். இதனால் நான் அவளை கண்டித்தேன். ஆனால் அவள் கேட்காமல் என்னிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் என்னிடம் தகராறு செய்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மனைவி ரம்யாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் அவளை அங்குள்ள தண்ணீர் நிரப்பிய வாளியில் அமுக்கி விட்டு சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com