அவினாசி அருகே நின்ற வேன் மீது மற்றொரு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி

அவினாசி அருகே நின்ற வேன் மீது மற்றொரு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
அவினாசி அருகே நின்ற வேன் மீது மற்றொரு வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலி
Published on

அவினாசி,

தர்மபுரி மாவட்டம் எரணஹல்லி பகுதியிலிருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த வேனை டிரைவர் மணிகண்டன் (வயது 36) என்பவர் ஓட்னார். அவருக்கு அருகில் தர்மபுரியை சேர்ந்த ஜெகதீசன் (43) மற்றும் சாமுவேல் (40) ஆகியோர் அமர்ந்து இருந்தார்.

இந்த வேன் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் அவினாசியை அடுத்த பழங்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நடுரோட்டில் மற்றொரு வேன் பழுதாகி நின்று கொண்டிருந்தது. அந்த வேன் மீது மணிகண்டன் ஓட்டிச்சென்ற வேன் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாமுவேலும், டிரைவர் மணிகண்டனும் காயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ளவர்கள் சாமுவேலை திருப்பூர் அருகே ஒரு தனியார் மருத்துவமனையிலும், டிரைவர் மணிகண்டனை மற்றொரு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com