பெங்களூரு அருகே ஆள்மாறாட்டம் செய்து போலீஸ் தேர்வு எழுதிய வாலிபர் கைது

பெங்களூரு அருகே, ஆள்மாறாட்டம் செய்து போலீஸ் தேர்வு எழுதிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு அருகே ஆள்மாறாட்டம் செய்து போலீஸ் தேர்வு எழுதிய வாலிபர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று போலீஸ் தேர்வு நடைபெற்றது. இதுபோல பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே கணேசகுடியில் உள்ள ஒரு கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில், இந்த தேர்வை சிலர் எழுதி கொண்டு இருந்தனர். இந்த நிலையில் அந்த தேர்வு மையத்திற்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி கணேஷ், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சிவண்ணா ஆகியோர் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி கணேஷ் அவரிடம் விசாரித்தார். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

அப்போது அந்த வாலிபர் கோலார் மாவட்டத்தை சேர்ந்த சிவபிரசாத்(வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் ஒசகோட்டை தாலுகா கோனகனஹள்ளியில் வசிக்கும் மஞ்சுநாத்(21) என்பவருக்கு பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும், கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்து வந்திருந்ததால் தப்பித்து விடலாம் என்று சிவபிரசாத் நினைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சிவபிரசாத் மீது நெலமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆள்மாறாட்டம் செய்து சிவில் காவலர் தேர்வு எழுதிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com