செங்கல்பட்டு அருகே, பிரம்மாண்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்

செங்கல்பட்டு அருகே பிரம்மாண்டமான கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தனர்.
செங்கல்பட்டு அருகே, பிரம்மாண்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்
Published on

செங்கல்பட்டு,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர அனாவசியமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியும் அதையும் மீறி மோட்டார் சைக்கிள்களில் சிலர் சாலையில் சுற்றித்திரிகிறார்கள்.

இவர்களை எச்சரிக்கும் விதமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 150க்கு 100 அடி அளவிலான பிரம்மாண்டமான கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஓவியர்கள் நலச்சங்க நிர்வாகிகள், மாவட்ட போலீசார், பாரதி சேவா சங்கத்தினர் மற்றும் அனைத்து ஓவியர்கள் ஒன்றிணைந்து பொது மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழகத்திலேயே மிக பிரம்மாண்டமான அளவில் இந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து, அதன் கீழ் தனித்திரு... விழித்திரு... வீட்டிலிரு... என்ற வாசகத்தை எழுதி உள்ளனர்.

ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் பார்க்கும்போது இந்த ஓவியம் பிரம்மாண்டமாக உள்ளது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com