

கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வட்டார மருத்துவ அலுவலராகவும், பொறுப்பு மருத்துவ அலுவலராகவும் டாக்டர் கோவிந்தராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் நேற்று பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மது அருந்திய நிலையில் நேற்று முன்தினம் சுமார் 20 வயது மதிக்கத்தக்க 2 பேர் கால் மற்றும் கைகளில் சிறிய சிராய்ப்பு காயங்களுடன் ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து விட்டு அமர்ந்திருக்க சொன்ன செவிலியர்கள், அதே சமயத்தில் காய்ச்சலுக்காக வந்திருந்த மற்றொருவரை பார்த்துக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த மேற்கண்ட 2 நபர்களும், செவிலியர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க வந்தனர். அவர்களை இரவு காவலாளி, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த கர்ப்பிணி பெண்கள் உள்பட சக நோயாளிகளை தடுக்க முற்பட்டனர்.