

கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வரதராசன், ஏட்டு ராஜாராம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதிரிவேடு பஸ் நிலையம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது துணிப்பையுடன் நடந்து வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், அவர் மாதர்பாக்கத்தை சேர்ந்த காட்டன் (வயது 40) என்பதும், அவர் வைத்திருந்த துணிப்பையில் 28 மதுபாட்டில்கள் இருப்பதும் தெரியவந்தது. திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
தேர்வாய் பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது அங்கு உள்ள மரப்புதர் அருகே ஒருவர் திருட்டுத்தனமாக மது விற்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் அதே கிராமத்தை சேர்ந்த நடராசன்(55) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 38 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்
இது குறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர்.