கல்பாக்கம் அருகே கட்டிட தொழிலாளிகள் 2 பேர் மர்மச்சாவு

கல்பாக்கம் அருகே கட்டிட தொழிலாளிகள் 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
கல்பாக்கம் அருகே கட்டிட தொழிலாளிகள் 2 பேர் மர்மச்சாவு
Published on

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த லத்தூர் கிராமத்தில் தனியார் நிலத்தில் கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. இங்கு கன்னியாகுமரி மாவட்டம் கொத்தனார்விளை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 28), அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு ராஜேஷ் (32) வேலை செய்து வந்தனர். இவர்கள் அங்கு கட்டிட தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அவர்கள் கடந்த ஒரு மாதமாக அங்குள்ள சிறிய அறையில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு அந்த அறையில் இருவரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் தங்கி இருந்த அறை கதவு நேற்று வெகு நேரமாகியும் திறக்காததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் வசந்துக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து அவர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவீனா, செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர்.

கதவு, ஜன்னல்கள் மூடப்பட்ட அந்த அறையில் சிறிய ஜெனரேட்டர் இயங்கி கொண்டிருந்தது. தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் இரவு முழுவதும் ஓடி கொண்டிருந்த அந்த ஜெனரேட்டரில் இருந்து வந்த புகையை சுவாசித்ததால் அவர்கள் இறந்தார்களா? அல்லது மின்சாரம் தாக்கி இறந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பின்னர் இருவரது உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து போன ராஜேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மற்றொரு ராஜேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com