காஞ்சீபுரம் அருகே டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி கார் கடத்தல்

காஞ்சீபுரம் அருகே டிரைவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி காரை கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே டிரைவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி கார் கடத்தல்
Published on

காஞ்சீபுரம்,

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை முதுகூர் கிராமத்தில் வசிப்பவர் சந்தோஷ்குமார், கார் டிரைவர். இவர் பெங்களூருவில் இருந்து திருவள்ளூருக்கு காரை ஓட்டி வந்தார்.

காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பரந்தூர் சாலை அருகே வந்தபோது, டிரைவர் சந்தோஷ்குமார் சிறுநீர் கழிப்பதற்காக காரை சாலையோரமாக நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சந்தோஷ்குமாரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். இதில் எரிச்சல் தாங்காமல் சந்தோஷ்குமார் அலறினார்.

உடனே அந்த மர்ம நபர்கள் காரை கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து டிரைவர் சந்தோஷ்குமார் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com