காஞ்சீபுரம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சீபுரம் அருகே டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
காஞ்சீபுரம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபுதேவா (வயது 30). டிரைவரான இவர் கொரோனா தொற்று காலத்தில் இருந்து வேலை இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு இடத்தில் மது குடித்து கொண்டு இருந்த நிலையில் அங்கு வந்த அதே தெருவை சேர்ந்த குல்பி என்கிற விஜயகுமார் (23) பிரபுதேவாவிடம் ஏன் இங்கு அமர்ந்து மது குடிக்கிறாய் என்று கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு மூண்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரபுதேவா, குல்பியை கையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்ற குல்பி தனது 2 நண்பர்களை அழைத்துக்கொண்டு அதே இடத்திற்கு மீண்டும் வந்தார். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரபுதேவாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த பிரபுதேவாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் தலைமையில் போலீசார் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com