காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி அருகே கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
Published on

காரைக்குடி,

காரைக்குடி அருகே மித்ராவயல் முத்துமாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மித்ராவயல்-சாக்கோட்டை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 வண்டிகள் கலந்து கொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது.

முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை மாத்தூர் பாண்டி மற்றும் நெற்புகப்பட்டி வர்ஷினி நந்தகுமார் வண்டியும், 2-வது பரிசை பல்லவராயன்பட்டி வர்சா இளமாறன் வண்டியும், 3-வது பரிசை தானாவயல் வெங்கடாசலம் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை கண்டனூர் பாலையூர் லெட்சுமி வண்டியும், 2-வது பரிசை உடப்பன்பட்டி சுப.சின்னையா வண்டியும், 3-வது பரிசை மருங்கூர் நாச்சியார் வண்டியும் பெற்றது.

இறுதியாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை மித்ராவயல் குஞ்சியப்பன் வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி கழனிவாசல் முனீஸ்வரர் வண்டியும், 3-வது பரிசை தட்டாகுடி முத்துமாரி வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com