கும்பகோணம் அருகே அறுவடை எந்திர டிரைவர் அடித்துக்கொலை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 5 பேர் கைது

கும்பகோணம் அருகே அறுவடை எந்திர டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணம் அருகே அறுவடை எந்திர டிரைவர் அடித்துக்கொலை ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 5 பேர் கைது
Published on

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விட்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா. இவருடைய கணவர் மனோகரன். இவர் தனது உறவினர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை பராமரித்து வந்தார். இந்த நிலத்தை உறவினர், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார்.

இந்த நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு இருந்தது. அதை அறுவடை செய்வதற்காக மனோகரனின் உறவினரிடம் இருந்து நிலத்தை வாங்கியவர் அறுவடை எந்திரம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதன்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள நாகமங்கலம் மூலங்குடி பகுதியை சேர்ந்த டிரைவர் காளிமுத்து (வயது 53) என்பவர் நேற்று அறுவடை எந்திரத்தை கொண்டு வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com