கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்; பெண் பலி 2 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்; பெண் பலி 2 பேர் படுகாயம்
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த முனிசுந்தரம். இவரது மனைவி பரமேஸ்வரி(வயது 46). இந்தநிலையில் பரமேஸ்வரி நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச்சேர்ந்த லட்சுமி (45) மற்றும் உறவுக்காரரான விஜய் (19) என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள ஏகவள்ளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த விஜய் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும், லட்சுமியும், பரமேஸ்வரியும் சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரமேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com