மதுராந்தகம் அருகே துணிகரம் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மதுராந்தகம் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுராந்தகம் அருகே துணிகரம் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
Published on

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் மண்டப தெருவில் வசிப்பவர் பிரதீப்குமார் (வயது 45). டாக்டரான இவர் மதுராந்தகம் தேரடி தெருவில் கிளனிக் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த பிரதீப்குமார் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்கநகை, 20 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.75 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மர்மநபர்கள் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டி உள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. டாக்டர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை மதுராந்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com