மாமல்லபுரம் அருகே வயல்வெளியில் தீ விபத்து

தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் மது குடித்து விட்டு வயல்வெளிகளில் தீ வைத்துள்ளனர்.
மாமல்லபுரம் அருகே வயல்வெளியில் தீ விபத்து
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, தெற்குப்பட்டு கிராமங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலையில் 100 ஏக்கர் வயல்வெளி நிலங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான வயல்வெளிகளில் எந்தவித நெற்பயிரும் வைக்காமல் கோரைப்புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காணப்பட்டன.

நேற்று இரவு 8 மணி அளவில் மர்மநபர்கள் தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் மது குடித்து விட்டு வயல்வெளிகளில் தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பரவி 60 ஏக்கர் காலி நிலம் 1 கிலோ மிட்டர் தூர அளவுக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்து மாமல்லபுரம், திருப்போரூர், சிறுசேரி, திருக்கழுக்குன்றம் பகுதி தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்களுடன் சென்று கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இந்த தீ விபத்தால் திருவிடந்தை, தெற்குப்பட்டு கிராமம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com