

மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 29). தனியார் நிறுவனத்தில் தச்சுத்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.
வரன் ஏதும் கிடைக்காத நிலையில் பாலாஜி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பொன்னேரியில் நடந்த திருமணத்திற்கு சென்ற பாலாஜி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆரணி ஆற்றில் வாலிபரின் உடல் மிதப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை செய்த போது அவர் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த மாயமான பாலாஜி என்பது தெரியவந்தது. போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.