நாங்குநேரி அருகே நம்பியாற்றின் குறுக்கே ரூ.1.93 கோடியில் புதிய பாலம் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

நாங்குநேரி அருகே உள்ள ராஜாக்கள் மங்களம் ஊராட்சி, நம்பியாற்றின் குறுக்கே ரூ.1.93 கோடியில் புதிய பாலம் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
நாங்குநேரி அருகே நம்பியாற்றின் குறுக்கே ரூ.1.93 கோடியில் புதிய பாலம் ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
Published on

இட்டமொழி,

நாங்குநேரி அருகே உள்ள ராஜாக்கள் மங்களம் ஊராட்சி சிறுமளஞ்சியை அடுத்த அணைக்கரை பகுதியில் உள்ள பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. கொண்டு சென்று, புதிய உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை வைத்தார். அதன்பேரில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.1.93 கோடி திட்ட மதிப்பில் 63 மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.

ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் களக்காடு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பெருமாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் சூர்யகுமார், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் அசோக்குமார், ஒன்றிய அவை தலைவர் தளவை சுந்தர்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் சிறுமளஞ்சி சிவா, மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக உயர்மட்ட பாலம் அமைக்க நிதி பெற்று தந்த ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com