நத்தம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது

நத்தம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.
நத்தம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது
Published on

நத்தம்,

நத்தம் அருகே புன்னப்பட்டியை சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி வினிதா (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வினிதாவுக்கு, நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உலுப்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக குடும்பத்தினர் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வினிதாவை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர், 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோபால்பட்டி அருகே சென்றபோது வினிதாவுக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

இதையடுத்து ஆம்புலன்சில் வந்த செவிலியர் ஜூலி மற்றும் மருத்துவ உதவியாளர் சேகர் ஆகியோர் ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com