ஓட்டப்பிடாரம் அருகே ரூ.40 லட்சம் செலவில் துணை சுகாதார நிலைய புதிய கட்டிடங்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.40 லட்சம் செலவில் 2 கிராமங்களில் துணை சுகாதார நிலைய புதிய கட்டிடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
ஓட்டப்பிடாரம் அருகே ரூ.40 லட்சம் செலவில் துணை சுகாதார நிலைய புதிய கட்டிடங்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
Published on

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம், முறம்பன் ஆகிய கிராமங்களில் தலா ரூ.20 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையத்துக்கான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்திப்பு நந்தூரி தலைமை தாங்கினார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ சின்னப்பன், தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அனிதா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துணை சுகாதார நிலைய புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். கர்ப்பினி பெண்களுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, யூனியன் துணை தலைவர் லட்சுமணபெருமாள், சில்லாங்குளம் முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பாலமுருகன், மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி அழகிரி என்ற கோபி, பஞ்சாயத்து தலைவர்கள் சரோஜா, தேன்மொழி, பெல்சி, கீழமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் கண்ணன், வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் பரமசிவன், யூனியன் ஆணையாளர்கள் ஹெலன்பொன்மணி, வளர்மதி, ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பசுவந்தனை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்புமணி நன்றி கூறினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. அமைச்சரும், வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு, கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 25 இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சேர்ந்தவர்களை நியமிப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். தொடர்ந்து, வாக்குச்சாவடி முகவர் நியமன விண்ணப்பங்கள் மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை பாசறை வடக்கு மாவட்ட செயலாளர் கணேஷ் பாண்டியனிடம் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, வினோபாஜி, தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி, பேரூராட்சி செயலாளர் ராமசாமி, வாசமுத்து, பாசறை நகர செயலாளர் வக்கீல் விஜயமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பழனி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com