பழனி அருகே அடிப்படை வசதிகள் இல்லாத அக்கமநாயக்கன்புதூர் பொதுமக்கள் அவதி

பழனி அருகே உள்ள அக்கமநாயக்கன்புதூரில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பழனி அருகே அடிப்படை வசதிகள் இல்லாத அக்கமநாயக்கன்புதூர் பொதுமக்கள் அவதி
Published on

நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே கரடிக்கூட்டம் ஊராட்சிக்கு உட்பட்டது அக்கமநாயக்கன்புதூர் கிராமம். இங்கு சுமார் 200-க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயிகளே. இந்நிலையில் இந்த கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத தால் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக 4, 5, 7 ஆகிய வார்டுகளில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை. எனவே அந்த பகுதியில் கடும் துர் நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாகி குழந்தை கள், முதியோர்களுக்கு பல் வேறு நோய்த்தொற்று ஏற் பட்டு வருகிறது. சிலர் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டு நெய்க் காரப்பட்டி, பழனி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

இதேபோல் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்ற னர். எனவே மக்கள் தண்ணீருக்காக அருகில் உள்ள தோட்ட பகுதிகளுக்கு சென்று வருவதும், குடிநீர் குழாய்களில் பெண்கள் காத்திருக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுபோதாதென்று கிராமத் தில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியாததால் மக்கள் இருளில் தவித்து வரு கின்றனர். இதனால் குழந்தை கள், பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்லவே அச்சப் படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆகையால் உயர் அதிகாரிகள் அக்கமநாயக்கன் புதூரில் அடிப்படை வசதி களை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலி யுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com