சத்திரப்பட்டி அருகே ரூ.1 கோடியில் சாலை, பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

சத்திரப்பட்டியை அடுத்த சிந்தலவாடம்பட்டியில் ரூ.1 கோடியில் சாலை, பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
சத்திரப்பட்டி அருகே ரூ.1 கோடியில் சாலை, பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்
Published on

சத்திரப்பட்டி,

திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலை வழியே பஸ், லாரி உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன. திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை சாலையோரம் பாதயாத்திரை பக்தர்கள் செல்வதற்கான பாதை உள்ளது. இந்நிலையில் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் சாலை சேதமாகி இருப்பதால் பல இடங்களில் விபத்துகளும் அரங்கேறி வந்தன.

இதையடுத்து சேதமடைந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் பகுதிவாரியாக நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சத்திரப்பட்டியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதியில் ரூ.1 கோடியில் சாலை, பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலையில் 5 பாலங்கள் மற்றும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர்கள் கண்ணன், சுவாமிநாதன் மற்றும் உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com