சோளிங்கர் அருகே ரூ.10 லட்சம் பட்டாசுடன் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது

சோளிங்கர் அருகே ரூ.10 லட்சம் பட்டாசுடன், நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
சோளிங்கர் அருகே ரூ.10 லட்சம் பட்டாசுடன் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது
Published on

அரக்கோணம்,

சோளிங்கர் அருகே ரூ.10 லட்சம் பட்டாசுடன் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கிளனர் உயிர் தப்பினர்.

சிவகாசியில் இருந்து 9 டன் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சென்றது. வேலூர் மாவட்டம் வாலாஜா - சோளிங்கர் சாலையில் பெருங்காஞ்சி ஏரிக்கரை அருகே நேற்று அதிகாலையில் லாரி சென்றுக் கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதனால் லாரியில் இருந்த பட்டாசுகள் ரோட்டில் சிதறி கிடந்தது. அதிர்ஷ்டவசமாக பட்டாசுகள் வெடிக்கவில்லை. ஒரு வேளை பட்டாசுகள் வெடித்து இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.

இந்த விபத்தில் டிரைவர், கிளனர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் கொண்டப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பட்டாசுகள் வெடிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பின்னர் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com