சிவகிரி அருகே, வயலில் காட்டு யானைகள் அட்டகாசம்

சிவகிரி அருகே வயலில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
சிவகிரி அருகே, வயலில் காட்டு யானைகள் அட்டகாசம்
Published on

சிவகிரி,

தென்காசி மாவட்டம்சிவகிரி அருகேஉள்ளதேவிபட்டணம் தேவர் மேட்டு தெருவை சேர்ந்தவர் நாராயணன் மனைவி தங்கேஸ்வரி. இவர் தேவிபட்டணத்துக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனத்துறையையொட்டியும், பழியன்பாறைக்கு மேற்கிலும் நெல் விவசாயம் செய்து வருகிறார். அவரது வயலில் காட்டு யானைகள் புகுந்துஅட்டகாசம் செய்துநெற்பயிர்களை மிதித்து நாசம் செய்தன.

இதேபோல் கடையநல்லூர் இடைகால் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு தேவியாறு பீட்டை சேர்ந்த ஆட்டுப்பண்ணைக்கு மேற்கே வயல் உள்ளது. அங்கு 15 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். இவரது வயலிலும் காட்டு யானைகள் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்தன. தங்கேஸ்வரி வயலில் அரை ஏக்கர் நெற்பயிர்களும், பால்ராஜ் வயலில் 1 ஏக்கர் நெற்பயிர்களும் நாசமாயின.

இதுகுறித்துதகவல் அறிந்ததும் சிவகிரி தாசில்தார் கிருஷ்ணவேல் தலைமையில் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், தேவிபட்டணம் கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் மற்றும் வேளாண்மை துறைஅதிகாரிகள்சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com