ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எலக்ட்ரிக்கல் கடை மேற்கூரையை உடைத்து பொருட்கள் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து பொருட்கள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எலக்ட்ரிக்கல் கடை மேற்கூரையை உடைத்து பொருட்கள் திருட்டு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருப்பவர் ஆறுமுகம். இவர் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். மறுநாள் வந்து கடையை திறந்தபோது அங்கிருந்த பொருட்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் டி.வி., கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா, மிக்சி, ஹார்டு டிஸ்க், பணம் போன்றவற்றை திருடி சென்று விட்டனர்.

கிருஷ்ணன்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஒரு வீட்டில் 134 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், எலக்ட்ரிக்கல் கடையில் திருட்டு நடந்துள்ளது. மேலும் கொள்ளையர்கள் எலக்ட்ரிக்கல் கடை அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூம் மேலே ஓட்டை போட்டு உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால் எலக்ட்ரிக்கல் கடையில் புகுந்து பொருட்களை திருடியுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் கிருஷ்ணன்கோவில் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com