

சென்னை,
சென்னை புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). இவர், நேற்றுமுன்தினம் இரவு டவுட்டன் பாலம் சிக்னல் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராமச்சந்திரனின் செல்போனை பறித்துவிட்டு தப்ப முயன்றனர்.
அதில் ஒருவர், பொதுமக்கள் பிடியில் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 10-வது தெருவை சேர்ந்த விஜய் (19) என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.