ஓட்டப்பிடாரம் அருகே ரூ.5¼ கோடி செலவில் புதிய பாலம் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்

ஓட்டப்பிடாரம் அருகே ரூ.5¼ கோடி செலவில் புதிய பாலம் அமைப்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
ஓட்டப்பிடாரம் அருகே ரூ.5¼ கோடி செலவில் புதிய பாலம் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்
Published on

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே நெல்லை-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் வேடநத்தம் பகுதியில் நபார்டு வங்கி மற்றும் கிராம சாலை திட்டத்தில் இருந்து ரூ.5 கோடியே 41 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். விளாத்திகுளம் யூனியன் தலைவர் முனியசக்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் அழகிரி என்ற வீரபாண்டி கோபி, ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர்கள் ஹெலன் பொன்மணி, வளர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி பஞ்சாயத்து நெடுங்குளம் கண்மாயை, தூத்துக்குடி விமான நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.28 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெடுங்குளம் கண்மாயை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், இணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, தாசில்தார் மணிகண்டன், யூனியன் ஆணையாளர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தனம், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் ஜோசப் ரெஜினால்டு, உதவி பொறியாளர் செல்வபாக்கியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com