செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்

செவ்வாப்பேட்டை பகுதியில் குண்டும், குழியுமாக தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், ரெயில் நிலையத்திற்கு பொதுமக்கள் சென்றுவர வழிவகை செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கப்பட்டு பணிகள் முடிக்கப்படாமல் உள்ள மேம்பாலத்தை துரிதமாக கட்டி முடிக்க வலியுறுத்தியும், செவ்வாப்பேட்டை பகுதியில் குண்டும், குழியுமாக தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தியும், சாலைகளை ஆக்கிரமித்துள்ள தடைகளை அப்புறப்படுத்தி ரெயில் நிலையத்திற்கு பொதுமக்கள் சென்றுவர வழிவகை செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மோகனா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோ, விஜயா, உத்தண்டராமன், ஆண்ட்ரியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் 7 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com