திருத்துறைப்பூண்டி அருகே, உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே, உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
Published on

திருத்துறைப்பூண்டி,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதற்காக நாகை நாடாளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் போலீசாருடன் இரவு, பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் சோதனை சாவடியில் பறக்கும் படை அலுவலர் சுதாகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கடலூர் மாவட்டம், பெரியநற்குணத்தை சேர்ந்த மனோகர் மகன் வினோத் (வயது 35) என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 560 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபுவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் உரிய ஆவணத்தை காண்பித்து இந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com