தூத்துக்குடி அருகே செல்போனில் ஆபாசபடம் அனுப்பி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கட்டிட தொழிலாளி கைது

தூத்துக்குடி அருகே செல்போனில் ஆபாச படம் அனுப்பி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே செல்போனில் ஆபாசபடம் அனுப்பி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கட்டிட தொழிலாளி கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே செல்போனில் ஆபாச படம் அனுப்பி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆபாச படம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், அந்த பண்ணிடம் ஆபாசமாக பேசியும், ஆபாச புகைப்படங்களை அனுப்பியும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது தாடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

அவரது உத்தரவின்பேரில், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கட்டிட தொழிலாளி கைது

இதில், பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தவர் தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்லப்பாண்டி மகன் கிருஷ்ணவேல் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அவர், இதுபோன்று பல பெண்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கிருஷ்ணவேல் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தனது செல்போன் எண்ணை அடிக்கடி மாற்றி கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்து, கிருஷ்ணவேல்தான் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேலை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன்கள், சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

----------

பெண்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறியதாவது:-

அன்னிய நபர்களிடமிருந்து இருந்து செல்போனுக்கு வரும் ஆபாச குறுஞ்செய்திகள், வாட்ஸ்-அப் செய்தி, ஆடியோ, வீடியோ போன்றவற்றிற்கு பெண்கள் எவ்வித பதிலும் அளிக்க வேண்டாம். அவர்களது எண்களை பிளாக் செய்து விட்டு, போலீசில் புகார் அளிக்கலாம்.

இதுபோன்ற தவறு செய்பவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்காக சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையம், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வித தயக்கமின்றி புகார் அளிக்கலாம். அவர்களது பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com