ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

பிரபல நடிகையும், நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
Published on

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளியில் புகழ்பெற்ற ஸ்ரீ பள்ளிகொண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவப்பெருமான் லிங்க ரூபத்தில் இல்லாமல் விக்ரக ரூபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இந்நிலையில் பிரபல நடிகையும், நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ரோஜா நேற்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.வி.எம். முனிசேகர் ரெட்டி அவரை வரவேற்று சால்வை அணிவித்து கவுரவித்து பிரசாதங்கள் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com